ஈரோடு மாவட்டத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் எதிர் வரும் 24.09.2025 முதல் 26.09.2025 வரை உள்ள நாட்களுக்கு "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் காலை 09.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது என ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
பவானிசாகர் பேரூராட்சியில் உத்தம தியாகி ஐயா திரு ஈஸ்வரன் அரங்கம் (மத்திய சாலை, பவானிசாகர்), சிவகிரி பேரூராட்சியில் கொங்கு மஹால் (சிவகிரி), பள்ளபாளையம் பேரூராட்சியில் கவி மஹால் (தங்கமேடு), மொடக்குறிச்சி வட்டாரத்தில் பச்சையம்மன் கோவில் மண்டபம் (குலவிளக்கு), பவானி வட்டாரத்தில் கொங்கு செட்டியார் மஹால் (தளவாய்பேட்டை), ஈரோடு வட்டாரத்தில் சமுதாய கூடம் (பேரோடு).
ஈரோடு மாநகராட்சி மண்டலம் -3 ல் தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகம்(சூரம்பட்டி 4 ரோடு), புன்செய்ப்புளியம்பட்டி நகராட்சியில் கே.ஜி மஹால் (ஜவஹர் மெயின் ரோடு), பாசூர் பேரூராட்சியில் ஸ்டேசன்புதூர் சமுதாயக்கூடம் (பாசூர்), நம்பியூர் -ல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி (கரட்டுப்பாளையம்), அம்மாபேட்டையில் கோகுலம் திருமண மண்டபம் (சித்தார்), பெருந்துறையில் வள்ளி திருமண மண்டபம் (மந்திரி பாளையம் ரோடு, திங்களுர்).
26.09.2025 வெள்ளி கிழமையன்று
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் லட்சுமி மஹால் திருமண மண்டபம் (பெருமாள் கோவில் வீதி), பவானிசாகர் வட்டாரத்தில் வி.என்.சி.திருமண மண்டபம் (செல்லம்பாளையம், காரப்பாடி), அந்தியூர் வட்டாரத்தில் நலம் மஹால் (முனியப்பம்பாளையம்), சென்னிமலை வட்டாரத்தில் ஸ்ரீ அனுமந்த பெருமாள் திருக்கோவில் மண்டபம் (ஆலாம்பாளையம் AD காலனி), லக்காபுரத்தில் (மொடக்குறிச்சி வட்டாரம்) ராஜாயம்மாள் திருமண மண்டபம், குருப்பநாயக்கன்பாளையத்தில் (பவானி வட்டாரம்) கவுண்டர் மஹால் (குருப்பநாயக்கன்பாளையம்).
தங்களது பகுதிகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் நடைபெறும் முகாம்களில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பல்வேறு துறைகளின் சேவைகளை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
.jpg)
.jpg)
.jpg)
