Type Here to Get Search Results !

ஆப்பகூடலில் முருகன் அடிமைகள் உழவாரப்பணிக்குழுவின் திருப்பணி...


ஈரோடு மாவட்டம் கோபியை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் "முருகன் | அடிமைகள்"  உழவாரப்பணிக்குழு ஒவ்வொரு மாதமும் ஒரு திருத்தலம் என்ற வகையில் முருகன் கோவில்களில் உழவாரப்பணி மேற்கொண்டு வருகிறது. தற்போது இக்குழுவில் 150-க்கும் மேற்பட்ட முருகன் அடியார்கள் இணைந்து தன்னார்வமாக திருப்பணிகளை செய்து வருகின்றனர்.

அதன்படி, பவானி அருகேயுள்ள  ஆப்பகூடலிலுள்ள ஸ்ரீ கணேச பாலதண்டாயுதபானி திருக்கோயில் வளாகத்தில், சுமார் 100-க்கும் மேற்பட்ட முருகன் அடியார்கள் கலந்து கொண்டு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை உழவாரப்பணி செய்தனர். 

பின்னர், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் திருப்புகழ் பாராயணமும் நடைபெற்றது. 

உழவாரப்பணி மற்றும் அபிஷேக ஆராதனைகளுக்குப் பின், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முருகன் அடிமைகள் உழவார பணி குழு  அவர்களும், திருக்கோயில் அர்ச்சகர் ராஜா சுவாமிகள் அவர்களும் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.