Type Here to Get Search Results !

"உங்களுடன் ஸ்டாலின்" முகாம் - கலெக்டர் ஆய்வு...


ஈரோடு மாநகராட்சி, வீரப்பன்சத்திரம், ஜனனி திருமண மண்டபத்தில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி இன்று (23.09.2025) நேரில் சென்று பார்வையிட்டார்.



"உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சி மண்டலம்-2 வீரப்பன்சத்திரம், ஜனனி திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மேலும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டு, இதுவரை பெறப்பட்ட மொத்த மனுக்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், முகாமிற்கு வருகை தந்த பொதுமக்களிடம் அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.



இந்த ஆய்வுகளில் ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், துணை ஆணையர் கு.தனலட்சுமி, ஈரோடு வருவாய் வட்டாட்சியர் முத்து கிருஷ்ணன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.










Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.