ஈரோடு மேற்கு மாவட்ட இந்துமுன்னணி மாவட்ட நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டமானது சிறுவலூர் ராஜா திருமண மண்டபத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் குருசாமி, மாவட்ட பொதுசெயலாளர் P.B.ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக இந்துமுன்னணி பேரியக்கத்தின் மாநில செயலாளர்
V S செந்தில்குமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வருகின்ற 13.11.2022 ஞாயிற்றுக்கிழமை பசுத்தாய் சந்தா சேகரிப்பு நாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் சந்தாதாரர்களை சேர்க்கவேண்டும் எனவும், மாவட்டத்தில் தொடர்ந்து மதமாற்ற கும்பல்களினால் மதமாற்றம் நடைபெற்று வருகிறது, அவ்வாறு மதமாற்றத்தில் ஈடுபடுவோரை கண்டறிந்து காவல்நிலையங்களில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்து சமுதாயத்திற்காக அர்பணிப்புணர்வோடு செயலாற்றிட அதிகமான புதிய பொறுப்பாளர்களை உருவாக்க வேண்டும் எனவும், முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.