இதில் சிறப்பு விருந்தினர்களாக திரைநட்சத்திரங்களான திருச்சிற்றம்பலம் பப்பு, அங்காடி தெரு மகேஷ், ஜான்வி, கன்னட சீரியல் நட்சத்திரம் சோப்னா ஆகியோர் பங்கு பெற்று விழாவினை சிறப்பித்தனர்.
வட இந்தியாவில் பல முக்கிய நகரங்களில் உள்ள சோட்டு மகாராஜ் சினி கபே நிறுவனம் அவர்களது தென்னிந்தியாவின் முதல் பயணத்தை ஈரோட்டில் ப்ளூமூன் சினிமாஸ் உடன் கைகோர்த்து டோம் தியேட்டரை துவங்கியுள்ளது. லோட்டஸ் குரூப் ஆஃப் கம்பெனி நிர்வாக மேலாளர் திரு. பெரியசாமி, அவர்கள் தியேட்டர் வளாகத்தை திறந்து வைக்க, அக்னி ஸ்டீல்ஸ் நிர்வாக மேலாளர் திரு. சின்னசாமி அவர்கள் பாக்ஸ் ஆபீஸ் புக்கிங், ஆர் ஆர் துளசி பில்டர்ஸ் சத்தியமூர்த்தி அவர்கள் சினி கபே கேன்டீன் ஆகியவற்றை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து எம் சிஆர் குரூப் ஆஃப் கம்பெனி நிர்வாக மேலாளர் திரு. ராபின் மற்றும் சி டீ குரூப் ஆப் கம்பெனி பங்குதார் வெங்கடேஷ்வரன், பிஎன்ஐ மேலான்மை இயக்குநர் மகேஷ் பிவி கிரி அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி படக்காட்சியை துவக்கி வைத்து சிறப்பித்தனர்.
இவ்விழாவில் சோட்டு மகாராஐ் தென்னிந்தியாவின் முதன்மை மேலாளர் திரு.சமீர் சோமய்யா
அவர்கள் பங்கு பெற்று இவ்விழாவை பற்றி அவர் கூறுகையில், எங்களது சோட்டு மகாராஐ் தென்னிந்தியாவில் ஈரோட்டில் முதல்முறையாக ப்ளூ மூன் சினிமாஸ் உடன் சேர்ந்து தங்களது முதல் பயணத்தை தொடங்கியுள்ளோம். மேலும் நாங்கள் இதை விரிவாக்கம் செய்ய தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் ப்ளூ மூன் சினிமாஸ் பிரான்சிஸ் உடன் சேர்ந்து பல நகரங்களில் உருவாக்க உள்ளோம் என கூறினார்.
இவ்விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள், ஈரோட்டில் உள்ள முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அனைவரையும் ப்ளூ மூன் சினிமாஸ் பங்குதாரர்கள் ஆர் கே கிருஷ்ணமூர்த்தி, மணிகன்டன், தினேஷ் தங்கமுத்து, அரவிந்த் கிருஷ்ணா, இரங்கநாதன், உசேன் ஆகியோர் வரவேற்றார்கள். இவ்விழா ஏற்பாடுகளை ப்ளூ மூன் சினிமாஸ் மேலாளர் இராம்மோகன் மற்றும் நந்தகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.