Type Here to Get Search Results !

77-வது குடியரசு தின விழாவில் கலெக்டர் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை...


ஈரோடு, 46 புதூர், ஆனக்கல்பாளையம், ஆயுதப்படை மைதானத்தில் இன்று (26.01.2026) நடைபெற்ற 77- வது குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.






இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காவல் துறையினரின் அணிவகுப்பினை பார்வையிட்டு, அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார். பின்னர் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திரப்போராட்ட தியாகிகள் மற்றும் அவர் தம் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசினை வழங்கி, மூவண்ண பலூன்களை பறக்க விட்டார்.





தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வனத்துறை, தீயணைப்புத்துறை, தேசிய மாணவர் படை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வணிவரித்துறை, மாநகராட்சி, பேரூராட்சிகள் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துத்துறை, மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (தொழிலாளர் அரசு ஈட்டுறுதி திட்டம்), சித்த மருத்துவம், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு (ம) மருந்து நிர்வாகத்துறை, 108 அவசர கால சேவை, கால்நடை பராமரிப்புத்துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை. பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, கருவூலம் மற்றும் கணக்குத்துறை, கூட்டுறவுத்துறை, நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை, மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், வேலைவாய்ப்புத்துறை, சமூக நலத்துறை, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தொழிலாளர் நலன் துறை, கைத்தறித்துறை, போக்குவரத்துத்துறை, தமிழ் வளர்ச்சித்துறை. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறை, மின்சார வாரியம், செய்தி மக்கள் தொடர்புத்துறை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தன்னார்வலர், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (தேர்தல்) உள்ளிட்ட துறைகளின் சார்பில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் காவலர்கள் என 141 நபர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்களையும் வழங்கினார்.


தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் ரூ.18,75,000/-மதிப்பீட்டிலும், ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் சார்பில் தலா ரூ.10,00,000/- வீதம் 7 பயனாளிகளுக்கு நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் ரூ.70,00,000/- மதிப்பீட்டிலும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.28,80,500/- மதிப்பீட்டில் வங்கிக்கடனுதவி மற்றும் மானியத்தொகை, வேளாண்-உழவர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1,20,000/- மதிப்பீட்டில் கழல்கலப்பைகள், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1,04,200/- மதிப்பீட்டில் உதவித்தொகை, வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.1,00,000/- வீதம் 5 பயனாளிகளுக்கு ரூ.5,00,000/- மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்கள், கூட்டுறவு துறையின் சார்பில், 1 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,50,000/-, மதிப்பீட்டில் கடனுதவியும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.60,000/- மதிப்பில் நிரந்தர காய்கறி பந்தல் அமைப்பதற்கான மானியத்தொகையும். சமூக நலத்துறையின் சார்பில் முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் 2 பயனாளிகளுக்கு ரூ.1,00,000/-மதிப்பீட்டில் முதலீட்டுப் பத்திரங்களும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.6,750/- வீதம் ரூ.13,500/-மதிப்பில் தையல் இயந்திரங்கள் 61601 மொத்தம் 30 நபர்களுக்கு ரூ.1,28,03,200/- மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து. பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், ஈரோடு கலைமகள் கல்வி நிலையம் துவக்கப்பள்ளியை சேர்ந்த 110 மாணவ மாணவியர்களின் ஜெய் கோ என்ற பாடல், அம்மாபேட்டை ஒன்றிய நடுநிலைப்பள்ளி 85 மாணவ மாணவியர்களின் இந்தியர் என்று சொல்லுவோம், சிவகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 62 மாணவ மாணவியர்களின் தஞ்சாவூரு சுருதி மேளம் கிராமியப் பாடல், ஈரோடு கீதாஞ்சலி சி.பி.எஸ்.இ. பள்ளி 60 மாணவ மாணவியர்களின் பாரதியார் பாடல், தேடிச் சோறு தின்று. பெருந்துறை கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 110 மாணவ மாணவியர்களின் வந்தே மாதரம், எனது இந்தியா, ஈரோடு, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 120 மாணவ மாணவியர்களின் நாம் நம்நாடு, கொண்டாடு கொண்டாடு, ஆகிய 7 பள்ளிகளைச் சார்ந்த 562 மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். 

இவ்விழாவில், காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா, மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.காஞ்சன் சௌதரி  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் தேன்மொழி (பொது).ரமேஷ்கிருஷ்ணன் (வளர்ச்சி), லோகநாதன் (வேளாண்மை), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வராஜ், முதன்மை கல்வி அலுவலர் மான்விழி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா, ஈரோடு வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், உட்பட காவல் துறையினர், அனைத்து அரசு உயர் அலுவலர்கள். முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.









Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.