இன்று துணை மின் நிலையத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் திறந்து வைத்தார்.
November 07, 2022
0
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட எரிசக்தி துறை தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் ஈரோடு மாவட்டம் சார்பில் ஈரோட்டில் அமைக்கப்பட்டுள்ள 230/110 கிலோ வளிம காப்பு துணை மின் நிலையத்தை மாண்புமிகு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் இன்று பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப. செல்வராஜ் எம்.பி, ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி. நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் கழக மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர், பகுதி, ஊராட்சி, வார்டு, வட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.