அவரைத் தொடர்ந்து கல்லூரியின் செயலாளர் திரு.கே.சி. கருப்பணன் அவர்கள் தலைமையுரை வழங்கினார். அவர்தம் உரையில் மாணவர்கள் கல்லூரியில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிமுறைகள் குறித்தும், எதிர்கால வேலை வாய்ப்பு பற்றியும் விரிவாக விளக்கிக் கூறினார். மேலும் கல்லூரியின் தலைவர் திரு.பி. வெங்கடாசலம், கல்லூரியின் இணைச்செயலாளர் திரு.ஜி.பி. கெட்டிமுத்து மற்றும் கல்லூரியின் அறங்காவலர் திரு. கே. கவியரசு ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர். மேலும் கல்லூரியின் துறைத் தலைவர்கள் அனைவரும் துறைவாரியாக தங்களது அறிமுக உரையில் தாங்கள் சம்பந்தப்பட்ட துறையின் முக்கியத்துவத்தைக் கூறி வேலைவாய்ப்பு விபரங்களை எடுத்துரைத்தனர். இது முதலாம் ஆண்டு மாணவர்களின் தன்னம்பிக்கையை மேலும் கூட்டியது.
இறுதியாக கல்லூரியின் துணை முதல்வரும் வணிகவியல் துறை தலைவருமான திரு.சி. நஞ்சப்பா அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.