நகராட்சியில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் என்ற தலைப்பில், எனது குப்பை எனது பொறுப்பு என்ற பொருளில் உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி நகராட்சிபேருந்து நிலையத்தில் தூய்மை உறுதிமொழி எடுத்துக்கொண்டு சிறப்பு தூய்மை பணிகளும், மரக்கன்றுகள் நடும் நிகழ்வும் நடைபெற்றது மேலும் இதன் தொடர்ச்சியாக நகரில் நகரில் உள்ள அனுமதி அற்ற விளம்பர பதாகைகள் கட்டிடங்களின் மேல் உள்ள விளம்பர பதாகைகள் அகற்றும் நிகழ்வும் நடை பெறுகிறது.
நகர் மன்ற தலைவர் என் ஆர் நாகராஜ் நகர்மன்ற உறுப்பினர் வாணி ஸ்ரீ, உழவன் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், நகரமைப்பு ஆய்வாளர் ஜானகிராமன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள், பல்வேறு நலச்சங்க உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.