Type Here to Get Search Results !

ஜோஸ்னா என்ற 1 ½ வயது குழந்தையை மீட்டு குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைப்பு - உரிமை உள்ளவர்கள் 30 நாட்களுக்குள் தொடர்பு கொண்டு குழந்தையை பெற்றுக்கொள்ளலாம்..


ஈரோடு மாவட்டம், குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மூலம் ஜோஸ்னா என்ற 1 ½ வயது குழந்தையை மீட்டு குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


எனவே இந்த குழந்தை பற்றி யாரேனும் உரிமை உள்ளவர்கள் தகுந்த ஆவணங்களுடன் செய்தி வெளியான 30 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், புதிய கட்டிடம் 6வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு 638011 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு குழந்தையை பெற்றுக்கொள்ளலாம்.

மேற்படி ஆட்சேபனை எதுவும் தெரியப்படுத்தாத பட்சத்தில் CARA  (Central Adoption Resource Authority) என்ற இணைய தளத்தின் மூலம் பதிவு செய்து குழந்தை தத்து கேட்டு விண்ணப்பித்துள்ள பெற்றோருக்கு தத்து வழங்கபடும். அதன் பிறகு குழந்தையை பெற இயலாது, என ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.