ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை ஆதரித்து ஈரோட்டிற்கு வருகை புரிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னிஅரசு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து, பெருந்துறை ஈரோடு தெற்கு மாவட்ட விசிக அலுவலகத்திற்கு சென்று வி.சி.க. நிர்வாகிகள், பொறுப்பாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். இவருக்கு, மாவட்ட பொருளாளர் விஜயபாலன் தலைமையில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. உடன் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சாதிக், தெற்கு மாவட்ட செயலாளர் வி.கமலநாதன், மாநில துணைச் செயலாளர் அம்ஜத்கான், பெருந்துறை ஒன்றிய செயலாளர், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை அண்ணாமலை, பெருந்துறை ஒன்றிய துணை செயலாளர் பிரவீன், மணியம்பாளையம் குமார், சென்னிமலை சுப்பிரமணி, சென்னிமலை ஒன்றிய துணை செயலாளர் பொன்னுசாமி, இரா.ஐயப்பன் ஆகியோர்கள் இருந்தனர்.