பயன்படுத்திய விவசாயி, விபத்தில் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அவரது
குடும்பத்தினருக்கு இலவச விபத்து காப்பீட்டுத் தொகையை ஈரோடு மாவட்ட
ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் வழங்கினார்.
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை வட்டாரம் பட்டலூர் தொடக்க வேளாண்மை
கூட்டுறவு கடன் சங்கத்தை சேர்ந்த விவசாயி சுப்ரமணி நானோ யூரியா 3
பாட்டில்கள் மற்றும் நானோ டி ஏ பி 2 பாட்டில்கள் ஆகமொத்தம் 5 பாட்டில்களை
வாங்கி பயன்படுத்தினார். அவர் எதிர்பாராத விதமாக கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி சாலை விபத்தின்போது உயிரிழந்தார். தற்போது அவரது குடும்பத்திற்கு விபத்து காப்பீட்டு தொகையான 50,000/- ரூபாய் இப்கோ நிறுவனத்தின் சார்பாக ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் வழங்கினார்கள், இந்தியாவின் நம்பர் 1 கூட்டுறவு உர நிறுவனமான இப்கோ நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு விவசாயிகள் வழக்கமாக பயன்படுத்தும் 45 கிலோ யூரியா மூட்டை மற்றும் 50 கிலோ டி.ஏ.பி க்கு மாற்றாக அதே அளவு பயன் அளிக்கும் திறன் கொண்ட நானோ யூரியா மற்றும் நானோ டி ஏ பி உரங்களை அறிமுகப்படுத்தியது.
அதிக அளவு மகசூல் பெற உதவி செய்கிறது. இந்த புதிய தலைமுறை நானோ
உரங்களை ஊக்குவிப்பதற்காக இப்கோ நிறுவனம் சங்கடஹரன் பீமா யோஜனா என்ற பெயரில் இலவச விபத்து காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் நானோ உரங்கள் வாங்கும் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஒரு பாட்டிலுக்கு 10,000 வீதம் இலவச விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு ஆண்டுக்கு 20 பாட்டில்கள் வரை இரண்டு லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்கோ நானோ உரங்கள் குறைந்த விலையில் மண்வளத்தை பாதுகாப்பதுடன் விவசாயிகளின் இலவச விபத்து காப்பீடு நண்பனாகவும் விளங்குகிறது. நானோ உரங்கள் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உரக்கடைகளிலும் கிடைக்கின்றன
இந்நிகழ்வில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.கந்தராஜா,
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளர் / முதன்மை வருவாய் அலுவலர் பெ.பிரகாஷ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)