1072 அடுக்கு மாடி குடியிருப்புகளை குடியிருப்புதாரர்களுக்கே மீண்டும் ஒதுக்கீடு - இன்று (28-03-2022) அமைச்சர் சு.முத்துசாமி அறிக்கை...
March 28, 2022
2
ஈரோட்டில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட 1072 அடுக்கு மாடி குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்து இருந்தது. அந்த அடுக்கு மாடி வீடுகள் இடிக்கப்பட்டு புதிதாக 1072 அடுக்கு மாடி குடியிருப்புகள் அங்கேயே கட்டப்பட்டுள்ளது. இக்குடியிருப்புகள் ஏற்கனவே அங்கு இருந்த குடியிருப்புதாரர்களுக்கே அவர்கள் இருந்த கதவு எண் கொண்ட வீடுகளே மீண்டும் ஒதுக்கப்படும். மேலும் 30.03.2022 அன்று நடைபெற இருந்த குலுக்கல் இரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (28-03-2022) வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால், ஈரோடு மாவட்டம், பெரியார் நகர், கருங்கல்பாளையம், மற்றும் பெரும்பள்ளம் ஓடை ஆகிய இடங்களில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட 1072 அடுக்கு மாடி குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்து இருந்தது. அந்த அடுக்கு மாடி வீடுகள் இடிக்கப்பட்டு புதிதாக 1072 அடுக்கு மாடி குடியிருப்புகள் அங்கேயே கட்டப்பட்டுள்ளது.
இக்குடியிருப்புகள் ஏற்கனவே அங்கு இருந்த குடியிருப்புதாரர்களுக்கே அவர்கள் இருந்த கதவு எண் கொண்ட வீடுகளே மீண்டும் ஒதுக்கப்படும். ஒதுக்கீடுதாரர்கள் பயன் பெறும் வகையில் முதலமைச்சர் பல சலுகைகளை அறிவித்துள்ளார்கள். ஒதுக்கீடு ஆணை பெறும் பொழுது அதை முழுமையாக தெரிவித்து கொள்ளலாம். எனவே, இத்திட்டத்தில் ஏற்கனவே இருந்த பயனாளிகள் அனைவரும் 06.04.2022 முதல் ஈரோடு வீட்டு வசதி வாரிய பிரிவை அணுகி 3 மாதத்திற்கான தவணை தொகை மற்றும் பராமரிப்பு தொகையை செலுத்தி ஒதுக்கீடு உத்திரவை பெற்றுக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
ஒதுக்கீடுதாரர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து குடியிருப்பு நல சங்கத்தை உருவாக்கி கொள்ள வேண்டும். ஒரே ஒரு சங்கம் மட்டும் உருவாக்கப்பட வேண்டும்.
அந்த சங்கத்திற்கு ஒவ்வொரு ஒதுக்கீட்டாளரும் பராமரிப்பு தொகையை மாதம் மாதம் செலுத்த வேண்டும். அந்த தொகைக்கு சமமான தொகையை வீட்டு வசதி வாரியம் தன் நிதியில் இருந்து நலச்சங்கத்திற்கு மாதாமாதம் ஒதுக்கி கொடுக்கும். அந்த தொகையை பயன்படுத்தி பராமரிப்பு முழுவதையும் குடியிருப்போர் நலச் சங்கம் சிறப்பாக செய்ய வேண்டும். இதை ஒதுக்கீடுதாரர்கள் அனைவரும் இணைத்து சிறப்பாக செய்தால் கட்டிடத்தின் ஆயுள்காலம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும்.
எனவே தமிழக முதல்வர் அவர்களின் சிறந்த திட்டத்தை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் 30.03.2022 அன்று நடைபெற இருந்த குலுக்கல் ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Good news
ReplyDeleteவிரைவாக செயல்படுத்தினால் நன்று
ReplyDelete