ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலையில் தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வார விழா.
March 11, 2022
0
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் சக்திநகரில் அமைந்துள்ள சக்தி சர்க்கரை ஆலையில் 51-வது தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வார விழாவை ஆலையின் தலைவரும், முதுநிலை பொது மேலாளருமான திருவேங்கடம் தலைமை தாங்கி பாதுகாப்பு கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
இந்த விழாவானது கடந்த 4-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவின் நிறைவு நாளின் போது தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குனர் வினோத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் மனிதவளம் மற்றும் நிர்வாகம் உதவி பொது மேலாளர் மோகன்குமார் வரவேற்று பேசினார்.இந்த நிகழ்ச்சியில் ஆலை தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆலை தலைவர் திருவேங்கடம் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசளித்து சிறப்பித்தனர்.
Tags