Type Here to Get Search Results !

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை கோரிக்கை மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் G.C.சிவக்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:
அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் துரிதம் அடைந்து, சேவைகள் மக்களை விரைவாக அடைய வேண்டும் எனவும், நேர்மையாக செயல்பட விரும்பும் அரசு அலுவலர்கள் கூட சில நேரங்களில் நெருக்கடிக்கு ஆளாகின்றனர் எனவும், இதனால் ரேஷன் கார்டு, குடிநீர் இணைப்பு. பட்டா மாறுதல் உள்ளிட்ட அடிப்படை அரசு சேவைகளில் தொடங்கி, தொழிற் சாலை செயல்பாடு, உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதி என எந்த பணியும் குறித்த காலத்துக்குள் நிகழவில்லை எனவும், விரைவான மற்றும் தரமான அரசு சேவைகளை பெற வழிவகுக்கும் சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழகத்தில் கொண்டு வரவேண்டும் எனவும், அரசு நிர்வாகத்தில் மக்களுக்கு வழங்க வேண்டிய அரசு சேவைகளுக்கு கால நிர்ணயம் செய்து, மக்கள் சாசனம் வரையறுத்துள்ளனர் எனவும், அதன் அடிப்படையில் சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்தி மக்களுக்கு விரைவான சேவையை வழங்க வேண்டும் எனவும், மீறும் அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர், மாவட்ட ஐ.டி. அணி, நகர செயலாளர், வட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர், மகளிர் அணி, ஆதிதிராவிடர் அணி, என அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.