ஈரோட்டில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
March 24, 2022
0
அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முதலாம் ஆண்டு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் 20.03.2022 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஈ.ஆர்.சிலம்பரசன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்ட மாணவரணி செயலாளர் வெற்றி பாலன், நகரச் செயலாளர் ஜெயபாலன், ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், துணை நகர செயலாளர்கள் சான்கான், கமால் பாட்சா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஈரோடு சார்பாக அதிக அளவு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும், ஈரோடு மாவட்டம் முழுவதும் கட்சிக் கொடியை ஏற்றி விழா நடத்த வேண்டும் என்றும், ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்றும், மம்தா பானர்ஜியின் கொள்கையை மக்களிடம் விரிவாக கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் சிவக்குமார், நிஜாம், ஒன்றிய செயலாளர் ராஜ்கமல், சேக் அப்துல்வஹாப், அருண்குமார், தாஹா, அலெக்ஸ், பிரதீப் குமார், காளிதாஸ் ஆகியோர் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.