ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் மாபெரும் வெற்றி கொண்டாட்டம்.....
March 11, 2022
0
நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலங்களில் மாபெரும் வெற்றிகண்ட பாரதிய ஜனதா கட்சி தனது தொண்டர்களுக்கு மிகப்பெரும் ஒரு மகிழ்ச்சியை கொடுத்தது.
இது இந்தியா முழுவதும் அனைத்து மாநில பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில் ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் தலைமையில் பாரதி ஜனதா கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.