ஊராட்சியில் வளர்ச்சித் திட்டப் பணிக்கு அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி. வெங்கடாசலம் பூமி பூஜையை துவக்கி வைத்தார்.
March 11, 2022
0
அந்தியூர் அடுத்த சின்னத்தம்பிபாளையம் ஊராட்சியில் வளர்ச்சித் திட்டப் பணிக்கு பூமி பூஜை செய்து அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி. வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் சின்னத்தம்பிபாளையம் ஊராட்சியில் உள்ள புது மஞ்சாள நாயக்கனூரில், மாரசாமி வீடு முதல் பொம்மநாயக்கர் வீடு வரையிலான புதிய கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணிக்கு 4 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் இதற்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அந்தியூர் திமுக எம்எல்ஏ வெங்கடாச்சலம் பணியை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சின்னத்தம்பிபாளையம் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags