ஈரோடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கத்தின் சார்பாக செயல்வீரர்கள் கூட்டம்
March 24, 2022
0
ஈரோடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கத்தின் சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் 24.03.2022 இன்று ஈரோடு அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியார் ஹாலில் நடைபெற்றது.
இந்த செயல்வீரர்கள் கூட்டம்
பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கத்தின் மாவட்ட தலைவர் E.R.M சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு
துணைத்தலைவர் K.கைலாசபதி முன்னிலை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
1) ஆக்கிரமிப்பில் உள்ள ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்டு அங்கே பொங்கல் வைக்கும் உரிமை கோரி 5001 சிதறுதேங்காய் பிரார்த்தனை போராட்ட நிகழ்ச்சியானது முப்பத்தி 31.03.2022 வியாழனன்று காலை 9 மணிக்கு ஈஸ்வரன் கோயிலில் இருந்து துவங்குவது என முடிவு செய்யப்பட்டு, பக்தர்கள் ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, பிரப் ரோடு, பன்னீர்செல்வம் பூங்கா, மீனாட்சிசுந்தரனார் சாலை வழியாக ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலை சென்றடைந்து அங்கே பிரார்த்தனையை நிறைவேற்றுவது என முடிவு செய்யப்பட்டது.
2) ஈரோடு மாநகரில் உள்ள 60 வார்டுகளில் இருந்தும் வார்டுக்கு 100 பேர் வீதம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செய்வது எனவும் மாநகர் முழுவதிலுமிருந்து 5001 அம்மன் பக்தர்களை கலந்து கொள்ளச் செய்வது எனவும் இதற்காக பக்தர்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் ரூ 10 காணிக்கையாக பெறுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
3) இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய 5 வார்டுகளுக்கு 1 பொறுப்பாளர் என நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.
4) 80 அடி சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
- போன்ற தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்
ஜெகதீஷ், பாஜக வக்கீல் பிரிவு பொறுப்பாளர் பழனிச்சாமி, செய்தி தொடர்பாளர் மல்லிகா சுப்ரமணியம் மற்றும் ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கத்தைச் சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.
Tags