அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் சென்னிமலை ஊராட்சி பகுதிகளில் ரூ.1.63 கோடி மதிப்பீட்டில், தார்சாலைகள் மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார். பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளியிடமிருந்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
March 25, 2022
0
ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட
கவுண்டச்சிபாளையம், புங்கம்பாடி, வடமுகம் வெள்ளோடு, ஈங்கூர், பனியம்பள்ளி,
சிறுகளஞ்சி ஆகிய ஊராட்சி பகுதிகளில் ரூ.1.63 கோடி மதிப்பிட்டில் புதிய
தார்சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணிகளை இன்று (25.03.2022) மாவட்ட
வருவாய் அலுவலர் டாக்டர்.ப.முருகேசன் அவர்கள் தலைமையில், மாண்புமிகு
வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள்
துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி அவர்கள் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளியிடமிருந்து மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மேலும் தார்சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்து ஊர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை
அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுக்கும் பல்வேறு
நடவடிக்கைகள் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று (25.03.2022)
சென்னிமலை ஊராட்சி ஒனறியத்திற்குட்பட்ட கவுண்டச்சிபாளையம் ஊராட்சி
ராசாம்பாளையம் குறுக்கு வீதிகளுக்கு ஓரடுக்கு கப்பி பரப்பி தார்சாலை மற்றும்
மயானம் செல்லும் சாலைக்கு தார்சாலை அமைக்கும் பணி ரூ.13.50 இலட்சம்
மதிப்பீட்டிலும், புங்கம்பாடி ஊராட்சி சாணார்பாளையத்தில் கான்கிரீட் மற்றும்
வடிகால் அமைத்தல் மற்றும் கதிர் அடிக்கும் கலம் அமைத்தல் பணி ரூ.10.84
இலட்சம் மதிப்பிட்டிலும், வடமுகம் வெள்ளோடு பெருந்துறை சாலை முதல் குமரன்
நகர் வரை தார்சாலை அமைக்கும் பணி ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டிலும், ஈங்கூர்
ஊராட்சி எல்லைமேடு நல்லமுத்தாம்பாளையம் சாலை முதல் ஈங்கூர் மயானம் சாலை
வரை சாலை வலுப்படுத்துதல் ரூ.28.57 இலட்சம் மதிப்பீட்டிலும், பனியம்பள்ளி
ஊராட்சி தோப்புப்பாளையம் அக்கரையாம்பாளையம் முதல் முத்தராண்டிபாளையம்
சாலை வரை தார்சாலை அமைக்கும் பணி ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டிலும்,
சிறுகளஞ்சி ஊராட்சி கரட்டுப்பாளையத்தில் வடிகால் அமைக்கும் பணி ரூ.10.00
லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.1.63 கோடி மதிப்பீட்டிலான 6 புதிய
திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்பகுதி மக்களின்
பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி
வாயிலாக பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்கள். ஏறத்தாழ 40,000
நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். தேர்தல் வாக்குறுதியில்
அறிவித்ததைப் போல் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்கள். நம்முடைய
மாவட்டத்திலும் ஏறத்தாழ 85 புதிய திட்டங்கள் மாண்புமிகு முதல்வர் அவர்கள்
துவக்கி வைத்து, அப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இத்திட்டங்கள்
முடிவடையும் பொழுது நமது மாவட்டத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைய
முடியும். மேலும் பொதுமக்களிடம் இருந்து புதிய திட்டங்கள் குறித்து கோரிக்கைகள்
இருந்தாலும் அதனையும் உடனடியாக நிறைவேற்றுவதற்கான ஏற்பாட்டினை
செய்கிறார் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், துணை மேயர் வே.செல்வராஜ்,
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எஸ்.ஆர்.செல்வம், சென்னிமலை ஊராட்சி
ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி இளங்கோ, பெருந்துறை வட்டாட்சியர்
கார்த்திகேயன், பெருந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட
தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.