தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் 74 வது இயக்குனர் குழுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் குறிஞ்சி என். சிவகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
April 04, 2022
0
தலைமைச் செயலகத்தில் இன்று (04.04.2022) தகவல் தொழில்நுட்பத் துறை, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் 74-வது இயக்குனர் குழுக் கூட்டம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி என். சிவகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் தகவல் தொழில் நுட்பவியல் துறை முதன்மை செயலாளர் டாக்டர் நீரஜ் மித்தல், மின் ஆளுமை இயக்குனர் கே. விஜயேந்திர பாண்டியன், நிதித்துறை இணைச் செயலாளர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன், எல்காட் நிறுவன மேலாண்மை இயக்குனர் அஜய் டாக்டர் யாதவ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர்/ அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.