ஈரோடு மாவட்டம், அந்தியூர் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகளை ஏ ஜி வெங்கடாசலம் (MLA) துவக்கி வைத்தார்.
April 04, 2022
0
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றியம் பிரம்மதேசம் ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முருகன் கிணறு முதல் மூப்பனூர் சிற்றூராட்சி வரை
ரூ.42 லட்சம் மதிப்பீட்டில்
1.5 கிலோமீட்டர் வரை தார்சாலை மேம்பாடு செய்வதற்கான பூமி பூஜையை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜி வெங்கடாசலம் அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்
(கிராம ஊராட்சி)
சிவசங்கர், பிரம்மதேசம் ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி, ஊராட்சி செயலர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.