மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மற்றும் சொத்து வரி உயர்வு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
April 10, 2022
0
ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் 09.04.2022 அன்று ஈரோடு மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மற்றும் சொத்து வரி உயர்வு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் கோவை மண்டல செயலாளர் ஏ.ரங்கநாதன் தலைமை தாங்கினார். ஈரோடு வடகிழக்கு மாவட்ட செயலாளர் ஜி.சி.சிவக்குமார்
முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாடுகளை மக்கள் நீதி மய்யத்தின் நற்பணி இயக்க அணி மாநில இணை ஒருங்கிணைப்பாளர் மகாதேவன்,செய்திருந்தார். இந்த நிகழ்வில் மாவட்டத்தின் அனைத்து சார்பு அணி நிர்வாகிகளும் நகர ஒன்றிய கிளை செயலாளர்களும் பொது மக்களுடன் கலந்து கொண்டு, மிகப்பெரிய அளவில் மாபெரும் ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது.