கோபி பகுதியில் ரூ.21.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார்.
April 09, 2022
0
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில்
இன்று (09.04.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி
அவர்கள் தலைமையில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர்
ஏ.ஜி.வெங்கடாசலம் அவர்கள் முன்னிலையில், வீட்டுவசதி மற்றும்
நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் ரூ.21.50 இலட்சம்
மதிப்பீட்டில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்
15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.31.50 இலட்சம் மதிப்பீட்டில் 2
பணிகளும், ரூ.45.65 இலட்சம் மதிப்பீட்டில் 12 பணிகளும், ரூ.90.00 இலட்சம்
மதிப்பீட்டில் 16 பணிகளும், ரூ.38.55 இலட்சம் மதிப்பீட்டில் 4 பணிகளும் என
மொத்தம் ரூ.2.06 கோடி மதிப்பீட்டில் 34 பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், வீட்டுவசதி
மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள், கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட, முருகன்புதூர் பகுதியில்
உள்ள நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கல்வி நிதித்திட்டத்தின் கீழ்
ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை பள்ளி
கட்டிடத்தினையும், கமலா ரைஸ் மில் வீதியில் 15-வது மத்திய நிதி குழு திட்டத்தின்
கீழ் ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைத்து சின்டெக்ஸ் மூலம்
தண்ணீர் வழங்கும் சேவையினையும் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி தலைவர் நவமணி கந்தசாமி,
கோபி வருவாய் கோட்டாட்சியர் பழனிதேவி, கோபிசெட்டிபாளையம்
நகர்மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ், கோபி வட்டாட்சியர் தியாகராஜன்,
கோபி நகராட்சி ஆணையாளர் உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்,
கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.