தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பின் சார்பில், அறிமுக மற்றும் கலந்தாய்வு கூட்டம்
April 19, 2022
0
தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பின் சார்பில், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் மற்றும் கலந்தாய்வு கூட்டம் 19.04.2022 இன்று நடைபெற்றது. இக்கூட்டம் ஈரோடு சூரம்பட்டி 4 ரோட்டில் உள்ள ராணா ஹாலில் நடைபெற்றது. மாநில துணைப் பொதுச் செயலாளர் மற்றும் ஈரோடு மாவட்ட தலைவரான ஏ.சசிக்குமார் அவர்கள் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட செயலாளர் பி.எம்.தாகூர் முன்னிலை வகித்தார். ஈரோடு மாவட்ட பொருளாளர் ஐ.இளவரசன் வரவேற்புரையாற்றினார்.மேலும் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாநில தலைவர் எஸ்.விநாயகமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டார், அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்வில் மாநில செய்தி தொடர்பாளர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாநில தலைவர் பேசும்போது நடக்க இருக்கும் மாநாடு குறித்து மற்றும் உறுப்பினர் சேர்க்கை போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்தும், வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது குறித்தும் எடுத்துரைத்தார். கலந்தாய்வு கூட்டத்தில், சிவக்குமார் நன்றியுரையாற்றினார்.