Type Here to Get Search Results !

சி.எஸ்‌.ஐ பள்ளியில்‌ பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டுப்‌ போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கொடியசைத்து தொடங்கி வைத்தார்‌.

ஈரோடு மாவட்டம்‌, சி.எஸ்‌.ஐ ஆனர்கள்‌ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளியில்‌ இன்று (19.04.2022) மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஹெச்‌.கிருஷ்ணனுண்ணி அவர்கள்‌, பள்ளிக்கல்வித்துறையின்‌ சார்பில்‌, 14 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டுப்‌ போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்‌.
ஈரோடு மாவட்டத்தில்‌ பள்ளிக்கல்வித்துறையின்‌ சார்பில்‌, 14 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டு போட்டிகளில்‌ 100 மீட்டர்‌, 200 மீட்டர்‌ தடகளப்‌ போட்டி, குண்டு எறிதல்‌, வட்டு எறிதல்‌ மற்றும்‌ நீளம்‌ தாண்டுதல்‌ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள்‌ நடைபெற உள்ளது.
இதில்‌ ஈரோடு மாவட்டம்‌ முழுவதும்‌ உள்ள நடுநிலை, மேல்நிலை, உயர்நிலை, சுயநிதி, நிதியுதவி மற்றும்‌ மெட்ரிக்‌ உள்ளிட்ட 600-க்கும்‌ மேற்பட்ட பள்ளிகளில்‌ 6 முதல்‌ 9-ம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவ, மாணவியர்கள்‌ விளையாட்டு போட்டிகளில்‌ பங்கேற்கின்றனர்‌. மேலும்‌ இப்போட்டிகளில்‌ முதல்‌ பரிசு, இரண்டாம்‌ பரிசு மற்றும்‌ மூன்றாம்‌ பரிசு பெறும்‌ மாணவ, மாணவியர்களுக்கு அந்தந்த பள்ளிகளில்‌ பரிசு மற்றும்‌ பாராட்டுச்‌ சான்றிதழ்கள்‌ வழங்கப்படும்‌. மேலும்‌ முதலிடம்‌ பெறும்‌ மாணவ, மாணவியர்கள்‌ ஒன்றிய அளவில்‌ நடைபெறும்‌ போட்டிகளிலும்‌, இதில்‌ வெற்றி பெறும்‌ மாணவ, மாணவியர்கள்‌ அடுத்து மாவட்ட அளவில்‌ நடைபெறும்‌ போட்டிகளிலும்‌ பங்கேற்க உள்ளனர்‌. இந்நிகழ்ச்சியில்‌, முதன்மை கல்வி அலுவலர்‌ இராமகிருஷ்ணன்‌, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்‌ முருகன்‌, மாவட்ட பசுமைபடை அமைப்பாளர் T.கீதா, சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் V.P. ரவி, சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பால் அசோக் ரத்தினகுமார், உடற்கல்வி இயக்குனர் T.R.ராஜ்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் கிறிஸ்டோபர் மற்றும் காட்வின் உட்பட மாணவ, மாணவியர்கள்‌ மற்றும்‌ தொடர்புடைய துறை அலுவலர்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.