பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில் கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீர் தெளித்தல் விழா பக்தியுடன் தொடங்கியது.
April 02, 2022
0
ஈரோடு மாவட்டத்தின் மிக முக்கிய திருவிழாக்களில் ஒன்றான, ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், சின்ன மாரியம்மன் கோவில், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த மாதம் 15 ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி 19 ம் தேதி இரவு 10 மணிக்கு பெரிய மாரியம்மன் உள்ளிட்ட 3 கோவில்களிலும் கம்பம் நடப்பட்டது. தினமும் ஏராளமான பக்தர்கள் கம்பத்துக்கு மஞ்சள் கலந்த நீர், பால், இளநீர் போன்றவற்றை கம்பத்துக்கு ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.
இந்த மாரியம்மன் கோவில் திருவிழாவில் இன்று சனிக்கிழமை கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீர் தெளித்தல் விழா தற்போது பக்தியுடன் தொடங்கியுள்ளது.
பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் பிடுங்கப்பட்டு பன்னீர்செல்வம் பூங்கா வழியாக மணிக்கூண்டு சென்றடையும் நேரத்தில் சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்களின் கம்பங்களும் பிடுங்கப்பட்டு மணிக்கூண்டுக்கு வந்தடையும். 3 கம்பங்களும் அங்கிருந்து புறப்பட்டு ஊர்வலமாக ஈஸ்வரன் கோவில் வீதி, பிரப் ரோடு, எம்.ஜி.ஆர்.சிலை, மேட்டூர் ரோடு, பஸ் நிலையம் சுவஸ்திக் கார்னர், சத்தி ரோடு, எல்லை மாரியம்மன் கோவில், நேதாஜி ரோடு, மண்டபம் வீதி, டவுன் போலீஸ் நிலையம், அக்ரஹார வீதி வழியாக காரைவாய்க்கால் சென்றடையும். மிக பக்தியுடனும், கோலாகலத்துடன் ஈரோடு நகர் பகுதி முழுவதும் நடைபெறும் இந்த கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீர் தெளித்தல் விழா தற்போது ஆரம்பமாகி உள்ளது.
Tags