ஈரோடு EKM அப்துல் கனி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பாக 25ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம்..
April 01, 2022
0
ஈரோடு மாவட்டம் பன்னீர்செல்வம் பூங்கா அருகில் உள்ள EKM அப்துல்கனி மார்க்கெட் தினசரி அனைத்து சிறு ஜவுளி வியாபாரிகள் சங்கம் சார்பாக இன்று 01.04.2022 வெள்ளிக்கிழமை 25ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழா M.N.நூர் சேட் அவர்கள் தலைமையில், K.செல்வராஜ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.ரா. திருமகன் அவர்கள், ஈரோடு மாநகராட்சி மேயர் S. நாகரத்தினம் சுப்பிரமணியம் அவர்கள், ஈரோடு துணைமேயர் V. செல்வராஜ் அவர்கள், ஈரோடு திமுக மாநகர செயலாளர் M. சுப்பிரமணியம் அவர்கள், ஈரோடு பெரியார் நகர் பகுதி அதிமுக செயலாளர் இரா. மனோகரன் அவர்கள், EKM அப்துல்கனி மதரஸா இஸ்லாமிய பள்ளியின் தாளாளர் G. முகமத் தாஜ் மொய்தீன் அவர்கள், ஈரோடு 36வது வார்டு மாமன்ற உறுப்பினர் ந. பழனியப்பா செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மேலும்
ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் B.ராஜேஷ் ராஜப்பா, மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயபாஸ்கர்
மற்றும் வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
Tags