Type Here to Get Search Results !

ஈரோடு திண்டல்‌ வேளாளர்‌ கல்லூரியில்‌ தேசிய அளவிலான தொழில்‌ நுட்ப கருத்தரங்கம்‌

ஈரோடு திண்டல்‌ வேளாளர்‌ பொறியியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பக்‌ கல்லூரியில்‌ CIVIL, CSE, IT & MDE துறையின்‌ சார்பில்‌ தேசிய அளவிலான கருத்தரங்கம்‌ 19.04.2022 அன்று இனிதே நடைபெற்றது.
வேளாளர்‌ கல்வி அறக்கட்டளையின்‌ செயலாளர்‌ எஸ்‌.டி.சந்திரசேகர்‌ ஐயா அவர்கள்‌ விழாவிற்கு தலைமை உரையாற்றினார்‌. அவர்‌ தமது உரையில்‌ பொறியியல்‌ மாணவர்களால்‌ இந்தியா மாபெறும்‌ பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்தார்‌.
வேளாளர்‌ பொறியியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பக்‌ கல்லூரியின்‌ முதல்வர்‌ டாக்டர்‌ எம்‌.ஜெயராமன்‌ அவர்கள்‌ விழாவில்‌ சிறப்புரையாற்றி தேசிய கருத்தரங்கின்‌ மூலம்‌ மாணவர்கள்‌ வெளிஉலகில்‌ நிகழும்‌ நடப்புகளை உடனுக்குடன்‌ அறிந்து கொள்ள வேண்டும்‌ என்று அறிவுறுத்தினார்‌. கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆர்‌.விமல்குமார்‌, துணைபொது மேலாளர்‌, மனிதவளத்துறை, கோரோ ஹெல்த்‌, கோயம்புத்தூர்‌ அவர்கள்‌ மாணவர்கள்‌ தொடர்ந்து கற்றல்‌ மூலம்‌ புதிய தொழில்நுட்பத்தில்‌ பெரும்‌ வளர்ச்சி காண முடியும்‌ என வலியுறுத்தினார்‌. கருத்தரங்கில்‌ தமிழகம்‌ முழுவதும்‌ 45 க்கும்‌ மேற்பட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களில்‌ இருந்து 230 மாணவர்கள்‌ பங்கேற்றனர்‌.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.