தமிழக பாம்பு மீட்பாளர்கள் சந்திப்பு ஈரோட்டில் உள்ள மணியன் மெடிக்கல் சென்டர் வளாகத்தில் நடைபெற்றது.
April 13, 2022
0
ஈரோடு மணியன் மெடிக்கல் சென்டர், ரீடிங் யுனிவர்சிட்டி யு.கே., ஈரோடு மாவட்ட வனத்துறை, ஈரோடு மாவட்ட தீயணைப்புத்துறை மற்றும் மீட்பார்கள் ஆகியோர் இணைந்து தமிழ்நாடு பாம்புகள் பாதுகாப்பு கூட்டமைப்பு மூலம் தமிழக பாம்பு மீட்பாளர்கள் சந்திப்பு ஈரோட்டில் உள்ள மணியன் மெடிக்கல் சென்டர் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் ஈரோடு மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி, மாவட்ட வன அதிகாரி கவுதம்,
ஒளிரும் ஈரோடு நிறுவனர் வெங்கடேஸ்வரன், மணியன் மெடிக்கல் சென்டர் மருத்துவ இயக்குனர் செந்தில் குமரன் மற்றும் பாம்புகடி விஞ்ஞானி சக்திவேல் வையாபுரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பாம்புகளை பாதுகாப்பான முறையில் எப்படி பிடிப்பது மற்றும் பாம்பு கடித்தால் முதலுதவி சிகிச்சையாக என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் பாம்புக்கடி வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் ராம்குமார் செய்திருந்தார்.