பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வைக் கண்டித்து 15.04.2022 (வெள்ளிக்கிழமை) கடையடைப்பு
April 13, 2022
0
கடுமையான பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து
15.04.2022 (வெள்ளிக்கிழமை) ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் மற்றும் இணைச்சங்கங்கள் சார்பாக ஒரு நாள் கடையடைப்பு
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் மற்றும் இணைச்சங்கங்கள் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்:
கடந்த சில மாதங்களாக பஞ்சு மற்றும் நூல் விலையானது வரலாறு காணாத வகையில் ஏற்றம் கண்டு வருகிறது. ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு விலை ஒரு இலட்சம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால் நூல் விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது. இவ்வாறு உயர்ந்து வரும் காரணத்தால் ஒட்டுமொத்த ஜவுளித்துறையும் அதிக பாதிப்படைந்துள்ளது எனவும்,
நாங்கள் எந்த ஒரு புதிய ஆர்டர்களும் எடுக்க முடியவில்லை, முன்னமே எடுத்த ஆர்டர்களும் விலை ஏற்றத்தின் காரணமாக அனுப்ப முடியவில்லை. சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இவ்வளவு விலை ஏற்றத்தின் காரணமாக சிறிய முதலீட்டைக் கொண்டு வியாபார செய்யும் வியாபாரிகள் மிகுந்த பாதிப்படைந்துள்ளார்கள். இதே நிலைமை நீடித்தால் ஈரோட்டில் ஜவுளி தொழில் மிகவும் பாதிப்படையும். ஜவுளி நிறுவனங்கள் தமது உற்பத்தியை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் இதனை நம்பியுள்ள பல லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழக் நேரிடும். ஆகவே மத்திய அரசு அதிக வருவாயை ஈட்டித் தரக்கூடிய இந்த ஜவுளித் துறையை கவனத்தில் கொண்டு இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும்,
ஆகவே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி பஞ்சுக்கு அனுமதி அளித்து 11% இறக்குமதி வரியை ரத்து செய்யவேண்டும். மேலும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில், பஞ்சையும் கொண்டு வரவேண்டும். எங்களுடைய இந்த கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை(15-04-2022) அன்று ஒரு நாள் கடையடைப்பு நடத்த உள்ளோம்,
என குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags