மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி தலைமையில் அங்கன்வாடி பணியாளர்களை கௌரவிப்பு
April 21, 2022
0
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் "போஷன் அபியான்" எனும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு, ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களில் உள்ள அங்கன்வாடி பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு 19.04.2022 (செவ்வாய்க்கிழமை) அன்று மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
கொடுமுடி மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட அண்ணாமலை கோட்டை, மற்றும் வேட்டுவபாளையம் அங்கன்வாடி, கொடுமுடி கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட அய்யம்பாளையம் ஊராட்சி, முருகம்பாளையம் அங்கன்வாடி, மொடக்குறிச்சி தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட எழுமாத்தூர் அங்கன்வாடி மற்றும் ஆயிகவுண்டன்பாளையம் அங்கன்வாடி, மொடக்குறிச்சி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பூந்துறை சேமூர் அங்கன்வாடி,மொடக்குறிச்சி வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட மொடக்குறிச்சி ஊராட்சி ஆரம்பப்பள்ளி அங்கன்வாடி மற்றும் பட்டறை வேலம்பாளையம் ஆகிய அங்கன்வாடி பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.எஸ்.சௌந்தரம், கொடுமுடி மேற்கு ஒன்றிய தலைவர் முருகானந்தம், கொடுமுடி கிழக்கு ஒன்றிய தலைவர் கிளாம்பாடி சேகர், வெள்ளோட்டம்பரப்பு முன்னாள் பேரூராட்சி தலைவர் எஸ். டி. செந்தில்குமார், மூத்த உறுப்பினர் பாலகுமார், மாவட்ட செயலாளர் கிருஷ்ணவேணி, கொடுமுடி ஒன்றிய பொருளாளர் ரகுநாதன், சிவகிரி கவுன்சிலர் கார்த்தி, கிளாம்பாடி கவுன்சிலர் ஜெகதாம்பாள், மொடக்குறிச்சி கவுன்சிலர்கள் காயத்ரி இளங்கோ, சத்யாதேவி சிவசங்கர் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.