மொடக்குறிச்சி MLA டாக்டர் சி.சரஸ்வதி முன்னிலையில் கிளாம்பாடி பேரூராட்சி 7வது வார்டு தி.மு.க கவுன்சிலர் பா.ஜ.க வில் இணைந்தார்
April 06, 2022
0
மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கொடுமுடி வட்டம், கிளாம்பாடி பேரூராட்சி 15 வது வார்டு திமுக துணை செயலாளரும் தற்போதைய 7வது வார்டு கவுன்சிலருமான T.சுரேஷ் குமார் அவர்கள் திமுக கட்சியில் இருந்து விலகி மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் முன்னிலையில் தன்னை பா.ஜ.க வில் இணைத்துக்கொண்டார்.
இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய தலைவர் கிளாம்பாடி சேகர், வெள்ளோட்டம்பரப்பு எஸ்.டி. செந்தில்குமார், கிளாம்பாடி 13வது வார்டு கவுன்சிலர் ஜெகதாம்பாள், கிளாம்பாடி பாஜக பொறுப்பாளர் சிவசுப்பிரமணி, மூத்த நிர்வாகி பாலகுமார் மற்றும் பாஜகவைச் சேர்ந்த மயில்சாமி, ரகுநந்தன் உட்பட முக்கிய பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் பலர் உடன் இருந்தனர்.