09.04.2022 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு
April 06, 2022
0
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ்
வட்டார அளவிலான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின்
கீழ் படித்த வேலைவாய்ப்பற்ற ஆண், பெனர் இருபாலருக்கும் (இளைஞர்களுக்கு) பல்வேறு
முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு
வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் தமிழ்நாடு
மகளிர் மேம்பாட்டுத் திட்டம், ஈரோடு மற்றும் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ஆகியோர் இணைந்து நடத்தும் வட்டார அளவிலான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
(Job Mela) வருகிற 09.04.2022 (சனிக்கிழமை) கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கரட்டடிபாளையத்தில் முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரையில்
நடைபெறவுள்ளது.
எனவே, இவ்வேலைவாய்ப்பு முகாமில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள்
கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
இதர விவரங்கள் குறித்து தெரிந்துகொள்வதற்கு அணுக வேண்டிய முகவரி-
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,
மகளிர் மேம்பாட்டுத் திட்டம்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
முதல் தளம், பூமாலை வணிக வளாகம்,
குமலன்குட்டை, பெருந்துறை சாலை,
ஈரோடு - 638011. தொலைபேசி எண்: 0424 - 2257087 / 9444094277
மின்னஞ்சல் : dpiu_erod@yahoo.com
மேற்படி நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் அனைத்து இளைஞர்களும்
(ஆண், பென் இருபாலரும் ) பங்கேற்று பயன்படுத்தி கொள்ள இணை இயக்குநர், திட்ட
இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.