Type Here to Get Search Results !

கலைஞரின்‌ ஒருங்கிணைந்த வேளாண்‌ வளர்ச்சித்திட்ட கிராம ஊராட்சிகளில்‌ இன்று 10.05.2022 சிறப்பு முகாம்கள்‌ - மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தகவல்‌.

ஈரோடு மாவட்டத்தில்‌ இன்று 10.05.2022 செவ்வாய்‌ கிழமை கலைஞரின்‌ அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்‌ வளர்ச்சி திட்ட கிராம ஊராட்சிகளில்‌ விவசாயிகள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ வேளாண்மை தொடர்புடைய துறை அலுவலர்கள்‌ கலந்து கொள்ளும்‌ சிறப்பு முகாம்‌ நடத்தப்பட உள்ளது. இம்முகாமில்‌ வேளாண்மை - உழவர்‌ நலத்துறை, கால்நடை துறை, வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்‌ விற்பனைத்துறை, வேளாண்‌ பொறியியல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காதி மற்றும்‌ கதர்‌ கிராம தொழில்துறை, மீன்வளத்துறை, நீர்வள ஆதாரத்துறை மற்றும்‌ கூட்டுறவு துறை அலுவலர்கள்‌ தங்கள்‌ துறையின்‌ திட்டங்கள்‌ பற்றி தெரிவித்து விவசாயிகளிடம்‌ விண்ணப்பம்‌ பெற உள்ளார்கள்‌. சூறிப்பாக விவசாய கடன்‌ அட்டை, சொட்டுநீர்‌ பாசனம்‌ அமைத்தல்‌, பட்டா மாறுதல்‌, மின்‌ இணைப்பு, பெயர்‌ மாற்றம்‌, விவசாய உற்பத்தியாளர்‌ குழுக்கள்‌ உருவாக்குதல்‌ போன்ற விவசாயிகளின்‌ ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத்‌ தேவையான விண்ணப்பங்கள்‌ பெறப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில்‌ உள்ள -பட்லூர்‌, சென்னம்பட்டி, குருவரெட்டியூர்‌, மாத்தூர்‌, பர்கூர்‌, வேம்பத்தி, மைக்கேல்பாளையம்‌, பிரம்மதேசம்‌, சின்னதம்பிபாளையம்‌, கவுந்தப்பாடி, மயிலம்பாடி, பெரியபுலியூர்‌, ஓடத்துரை, கொத்தமங்கலம்‌, வின்னப்பள்ளி, தேசிபாளையம்‌, குமாரவலசு, முருங்கத்தொழுவு, முகாசிபிடாரியூர்‌, வடமுகம்வெள்ளோடு, ஒட்டப்பாரை, பசுவப்பட்டி, எலவமலை, மேட்டுநாசுவம்பாளையம்‌, அளுக்குளி, சிறுவலூர்‌, கலிங்கியம்‌, வெள்ளாங்கோயில்‌, மொடச்சூர்‌, கோட்டுப்புள்ளாம்பாளையம்‌, கொளத்துப்பாளையம்‌, கொந்தலம்‌, 46 புதூர்‌, ஈஞ்சம்பள்ளி, எழுமாத்தூர்‌, நஞ்சை ஊத்துக்குளி, கணபதிபாளையம்‌, லக்காபுரம்‌, அட்டவணைஅனுமன்பள்ளி, முகாசிஅனுமன்பள்ளி, துய்யம்பூந்துரை, பூந்துறைசேமூர்‌, ஆனந்தம்பாளையம்‌, கெட்டிச்செவியூர்‌, கோசனம்‌, அஞ்சானூர்‌, வேமாண்டம்பாளையம்‌, சீனாபுரம்‌, நிச்சாம்பாளையம்‌, திங்களுர்‌, பாண்டியம்பாளையம்‌, துடுப்பதி, திருவாச்சி, தோரணவாவி, சூதியாலத்தூர்‌, உக்கரம்‌, செண்பகபுதூர்‌, பெருமுகை, ஆசனூர்‌ மற்றும்‌ பைனாபுரம்‌ ” ஆகிய பஞ்சாயத்துகளில்‌ உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில்‌ இம்முகாம்‌ காலை 10.00 மணி முதல்‌ நடைபெற உள்ளது. இப்பகுதி விவசாயிகள்‌ இம்முகாமில்‌ கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.ஹெச்‌.கிருஷ்ணனுண்ணி இஆப., அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.