உலகின் முதல் செல்வ ஈர்ப்பு மையமான ஸ்ரீகுபேர பீடம் - ஸ்ரீ குபேரகுருஜி Dr. ஸ்டார் ஆனந்ராம் தகவல்
May 14, 2022
0
வெள்ளியங்கிரி, இருட்டுப்பள்ளம், காளி மங்கலம் பகுதியில் உலகின் முதல் செல்வ ஈர்ப்பு மையமான ஸ்ரீ குபேர பீடம் அமைய உள்ள இடத்தில் 16.05.2022 திங்கள் கிழமை பௌர்ணமி தினத்தன்று சண்முகர் மூல மாலா மந்திரப் புண்ணிய ஹோமம் நடைபெற உள்ளதாக ஸ்ரீ குபேரகுருஜி Dr. ஸ்டார் ஆனந்ராம் தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் தனித்தனி குபேர வசிய ஹோமங்கள் நடைபெற உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி ஸ்ரீ குபேர குருஜி ஸ்டார் ஆனந்த ராம் அவர்கள் கூறுகையில்...
நமது முன்னோர்களின் காலக்கணிதத் தத்துவப்படி வைகாசி மாதம் நற்காரியங்களுக்கான நல்மாதம். குறிப்பாக, உலக நன்மையின் பொருட்டு மேற்கொள்ளப்படும் செயல்களை நடைமுறைப் படுத்துவதற்கு மிகவும் உகந்த காலம். காரணம், இம்மாதத்தில்தான் சந்திரன் விசாக நட்சத்திரத்தில் உச்சம் பெறுகிறார். அதையே வைகாசி விசாகமாகத் திருக்கோவில்களில் கொண்டாடி மகிழ்கிறோம். சமயச் சான்றோர்கள் இந்நாளை குரு பௌர்ணிமா என்று சிறப்பிப்பர்.
இவ்வருடத்தில் இன்னும் ஒரு சிறப்பும் கூடி வந்திருக்கிறது. ஆம். ஆன்மீகம் மற்றும் தொழில் மேம்பாட்டுக்கு அதிபதியான குரு மீன ராசியில் இவ்வருடம் முழுக்க இருக்கப்போகிறார். செல்வ வளத்துக்குக் காரணமான சுக்ரன் உச்சம் பெறும் ராசியும் மீனம். அவ்வகையில் இவ்வருடத்திய வைகாசி மாதம் கூடுதல் வலிமையைப் பெறுகிறது. காலக்கணித அடிப்படையில் குரு மற்றும் சுக்ர இணைவு காலம் என்பது நமது
செல்வவளத்தை மேம்படுத்த உதவும் குபேர காலம்.
அதிலும் குறிப்பாக, இவ்வருட வைகாசி விசாகத்தில் இருமுறை பௌர்ணமி வருகிறது. ஆக செல்வச்செழிப்பும் குடும்ப வளமும் இன்னும் மேன்மை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த குபேர காலத்தில் துவங்கப்படும் செயல்கள் எப்போதும் நமக்கு ஏற்றத்தையே தரும்.
குபேர காலச் சிறப்புடனும், நம் சித்தர் பெருமக்களின் ஆசியுடனும் ஸ்ரீகுபேர பீடக் கட்டுமானத் துவக்கப் பணிகள் துவங்கப்பட இருக்கின்றன. அப்பணிகள் கீழ்காணும் முதன்மைப் புண்ணிய நிகழ்வுகளாக ஒருங்கிணைக்கப்பட இருக்கின்றன. அவற்றில் கலந்து கொண்டு வாழ்வில் நல்மாற்றத்தையும் தொழிலில் முன்னேற்றத்தையும் பெற்று ஆனந்தமாய் வாழ அழைக்கிறோம்;
14.05.2022சனி மாலை 6 மணிமுதல்
ஸ்ரீகுபேர பீடம் அமைய இருக்கும் புண்ணிய நிலத்தில் கணபதி பூஜை மற்றும் வாஸ்து சாந்தி
15.05.2022 ஞாயிறு காலை 9 மணி முதல்
ஸ்ரீகுபேர பீடத்தின் மையமாக அமைய இருக்கும் சொர்ண குபேர சக்திவேல் பீட பிரதிஷ்டை அடிக்கல் நாட்டு பூஜை
16.05,2022 திங்கள் வைகாசி விசாக முதல் பௌர்ணமி தினத்தன்று காலை 9 மணி முதல்
உலகமக்களின் வாழ்வில் செழிப்பும் சிறப்பும் மேம்படவும்.. ஸ்ரீகுபேரபிடச் செயல்பாடுகள் சிறப்புடன் நடைபெறவும்..
ஸ்ரீகுபேர பீடம் ஆனந்தத்துடன் ஒருங்கிணைக்கும் புண்ணிய பூஜைகளிலும், நட்சத்திர யாக நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள விரும்பும் ஆனந்த அன்பர்கள் முன்பதிவு செய்து கொள்வது முக்கியம்.
ஸ்ரீகுபேர பீடம் ஒருங்கிணைக்கும் சொர்ண குபேர சக்திவேல் பிரதிஷ்டைப் புண்ணிய நிகழ்வில் கிரியை நெறிமுறைகளோடு விரதம் மேற்கொள்ள இருக்கும் ஆன்மிக அன்பர்களுக்கு உருவேற்றப்பட்ட சொர்ண குபேர மந்திர வேல்கள் (1008 அன்பர்களுக்கு மட்டும்) வழங்கப்பட உள்ளன என தெரிவித்துள்ளார். மேலும் இந்நிகழ்ச்சிகளில் பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள் விரைந்து முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.