கலிங்கியம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்
May 03, 2022
0
கோபி வட்டம் கலிங்கியம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் திராவிட முன்னேற்ற கழக பொறுப்பாளர்கள் விவசாயப் பெருங்குடி மக்கள் மற்றும் வியாபார பெருங்குடி மக்கள் அனைவரும் கலந்து கொண்டு வீட்டு வரி உயர்வுக்கு ஆட்சேபனைகளை வழங்கினார்கள். மேலும் சாக்கடை எடுக்கப்படாதது மற்றும் தெரு விளக்கு எரியாதது குறித்தும் பஞ்சாயத்து தலைவரிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு உரிய விளக்கத்தை பஞ்சாயத்து தலைவர் அவர்கள் அளித்தார்கள். மேலும் 100 நாள் திட்ட ஜாப் கார்டை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததை கேட்டதற்கு உடனே வழங்குவதாக உறுதியளித்தனர்.
மேலும் கலிங்கியம் ஊராட்சிக்கு உட்பட்ட வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கக்கூடாது என்று விவசாயிகள் மனு அளித்தனர்.