கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் பவானி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள மூன்று நீரேற்று நிலையங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த மூன்று நீரேற்று நிலையங்களையும் ஒன்றிணைத்து ஒரே திட்டமாக செயல்படுத்துவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் நேரில் சென்று ஆய்வு செய்தார்,
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கோபி நகரின் வீடுகளுக்கு கூடுதலாக இணைப்புகள் வழங்கும் நோக்கத்தில் புதிய நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. புதிய தார் சாலைகள் அமைப்பதற்கான திட்ட வரையறை செய்த பின் கூடுதல் நிதியை பெற்று தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் என்றும்
கோபி நகரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக புறவழி சாலை அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் துவங்கப்படுமென்று கோபி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர் மன்ற தலைவர் கந்தவேல்முருகன்,
நகர செயலாளர்
பிரீனியோ கணேஷ்,
தகவல் தொழில்நுட்ப செயலாளர்
முத்துரமணன்,
கலிங்கியம் ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா, அருள், இராமச்சந்திரா, மெளதீஸ்வரன்,
சக்திகுமார்
மற்றும் அஇஅதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.