வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் 12-ஆவது ஆண்டு விழா - விஜய் டி.வி. புகழ் ஈரோடு மகேஷ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
May 05, 2022
0
வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் 12-ஆவது
ஆண்டு விழா 30.04.2022 (சனிக்கிழமை) அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவினை வேளாளர் அறக்கட்டளையின் தலைவர் திரு.எஸ்.எஸ்.கந்தசாமி
அவர்கள் தலைமையேற்றுத் துவங்கிவைத்தார், பள்ளியின் தாளாளர் திரு.எஸ்.டி.
சந்திரசேகர் அவர்கள் சிறப்பு விருந்தினரை அழைத்து வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் வேளாளர் அறக்கட்டளையின் உறுப்பினர்களான
திரு.பி.கே.பி.௮ருண், திரு.பாலசுப்பிரமணியம், திரு.யுவராஜ் மற்றும் பள்ளியின்
முதன்மை முதல்வர் திரு.ஆர்.நல்லப்பன் அவர்களுடன் மேலும், பலர்
கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு
விருந்தினராக விஜய் டி.வி. புகழ் திரு. ஈரோடு மகேஷ் அவர்கள்
கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளித்துச் சிறப்புரையாற்றினார்.
முன்னதாகப் பள்ளியின் முதல்வர் திருமதி.எஸ்.பிரேலதா அவர்கள்
ஆண்டறிக்கை வாசித்தார். மாணவர்களின் கலைநிகழ்ச்சி கோலாகலமாக
நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து பள்ளியின் துணை முதல்வர்
திருமதி.வி.பிரியதர்ஷினி அவர்கள் நன்றியுரை நல்கினார். இவ்விழாவில் மக்கள்
தொடர்பு அலுவலர் திரு.எம்.கார்த்திகேயன், ஆசிரியர்கள்,
பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்ட விழா
இனிதே நிறைவுபெற்றது.