ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி கொடுமுடி வட்டம், சிவகிரி அரசு மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி ரம்யா (554 மதிப்பெண்) மற்றும் மாணவன் அஜய் (543 மதிப்பெண்), 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி மதுஸ்ரீ (467 மதிப்பெண்) மற்றும் மாணவன் தருண் (454 மதிப்பெண்) ஆகியோருக்கு சிவகிரி அலுவலகத்தில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் வாழ்த்துக்கள் கூறி பொன்னாடை போர்த்தினார்.
நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட பார்வையாளர் என்.பி. பழனிசாமி, தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி. செந்தில்குமார், பொதுச்செயலாளர் வி.சி.வேதானந்தம், கொடுமுடி மேற்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார், சிவகிரி 2வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.