ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி, கொடுமுடி வட்டம், சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட கீழ்க்கண்ட தேமுதிக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் 70 பேர் பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்தம், கோட்பாடுகள், கட்சி ஆட்சி வளர்ச்சி பணி மற்றும் தலைமை பண்பாடு ஆகியவை மூலம் கவர்ந்து இழுக்கப்பட்டு மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் முன்னிலையில் தேசிய நீரோட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்கள்.
தேமுதிக கொடுமுடி ஒன்றிய கேப்டன் மன்ற செயலாளர் மற்றும் முன்னாள் 12 வது வார்டு கவுன்சிலர் எஸ். ஏ.நாச்சிமுத்து, பேரூர் கழக பொறுப்பாளர் மற்றும் செயலாளர் எம்.கொறடா சங்கர், 12வது வார்டு செயலாளர் எஸ்.அமிர்தலிங்கம், 12வது வார்டு கேப்டன் மன்ற தலைவர் ஆர்.குப்புசாமி, 12வது வார்டு பொறுப்பாளர் எம்.துரைராஜ், 10வது வார்டு பொறுப்பாளர் எஸ்.கே.சுப்பிரமணி, கேப்டன் மன்ற செயலாளர் என். குணசேகர், 12வது வார்டு பொறுப்பாளர் பாலமுருகன், ஜெயபிரகாஷ், இளைஞரணி முத்துகிருஷ்ணன் மூர்த்தி மற்றும் இவர்களுடன் 60 பேர் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர்.
நடைபெற்ற இணைப்பு விழா நிகழ்வில் ஈரோடு வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பார்வையாளர் என்.பி. பழனிசாமி, தெற்கு மாவட்ட தலைவர் எஸ். டி. செந்தில்குமார், தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வி.சி. வேதானந்தம், கொடுமுடி மேற்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார், முன்னாள் ஒன்றிய தலைவர் முருகானந்தம், சிவகிரி 2வது வார்டு கவுன்சிலர் கார்த்தி, சிவகிரி கலைவாணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.