கீழ்பவானி வாய்க்கால் பிரச்சனை தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்
June 30, 2022
0
ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் கமலாலயத்தில் 29.06.2022 கீழ்பவானி பாசன வாய்க்காலில் காங்கிரீட் தளம் அமைப்பதில் ஏற்படுகின்ற சாதக பாதக நிகழ்வுகளை ஆராயும் ஆய்வுக் குழு அமைப்பது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு தமிழக பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி கே நாகராஜ் தலைமையில் நடைபெற்றது.
அவர் வெளியிட்ட செய்தியில் வரும் 06.07.2022 அன்று மாநிலத் தலைவர் திரு. கே. அண்ணாமலை அவர்களுடன் கீழ்பவானி பாசன பகுதியில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் விவசாயிகளோடு ஆய்வு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் தெரிவித்தார்.
நடைபெற்ற நிகழ்வில் நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள், மாநில விவசாய அணி செயலாளர் லோகேஷ் மற்றும் விஜி, தெற்கு மாவட்ட தலைவர் எஸ். டி. செந்தில்குமார், பொதுச்செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, ஈரோடு தெற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் பன்னீர்செல்வம், பொதுச் செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் ஈரோடு மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் அண்ணாதுரை உள்பட பல்வேறு பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.