இன்று 10/07/2022 கோபியில் காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.ராசா அவர்களின் (03/07/2022) சர்ச்சை பேச்சு மற்றும் பாதிரியார் திரு. ஜெகத் கஸ்பர் ராஜ் அவர்களின் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்தை கண்டித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. அரவிந் சாகர். கோ. அவர்கள் தலைமையில் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் அனைவருடனும் சேர்ந்து புகார் மனு மற்றும் உரிய வீடியோ அளிக்கப்பட்டது. புகாரை பெற்றுக்கொண்ட உயர்திரு. துணைக்
கண்காணிப்பாளர் அவர்கள் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதி அளித்துள்ளார்.
இதில் ஜனகரத்தினம் ஜி, தினேஷ்குமார் ஜி, முருகையன் ஜி, ரகுநந்தன் ஜி, பாலமுருகன் ஜி, கவின், சசிகுமார், குப்புராஜ், பிரவீன், ரகுசூர்யா, சுதாகர், பவித்ரன், நவீன் மற்றும் பலர் உடனிருந்தனர்.