பாரதி ஜனதா கட்சியின் சென்னிமலை ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா...
July 18, 2022
0
15.07.2022 வெள்ளிக்கிழமை ஈரோடு தெற்கு மாவட்டம் சென்னிமலை தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகம் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது.
திறப்பு விழா நிகழ்வின் போது பல்வேறு கட்சிகளில் இருந்து பாரதி ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்ட நிகழ்வும் நடைபெற்றது.
நடைபெற்ற நிகழ்வில் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பொது செயலாளர்கள் வி.சி.வேதானந்தம், எஸ். எம். செந்தில், ஈஸ்வரமூர்த்தி, சிவகாமி மகேஸ்வரன், ஒன்றிய பிரபாரி பாலசுப்பிரமணியம், சென்னிமலை ஒன்றிய தலைவர் சந்திரசேகர், பொதுச் செயலாளர்கள் சுந்தர்ராசு, வசந்தகுமார், துணைத்தலைவர்கள் தமிழரசன், மதன்குமார், பொருளாளர் மூர்த்தி, மாநில, மாவட்ட, அணி, பிரிவு, மண்டல் தலைவர்கள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.