சிவகிரி புதிய பஸ் நிலையத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா -
July 18, 2022
0
பனங்காட்டு மக்கள் கழகம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொடுமுடி வட்டம், சிவகிரி புதிய பஸ் நிலையத்தில் கொண்டாடப்பட்டது. இதில் காமராஜர் உருவப்படத்திற்கு மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.
நிகழ்வில் பனங்காட்டு மக்கள் கழகம் மாவட்ட பொறுப்பாளர் ஜீவா, இளைஞரணி பொறுப்பாளர் ரமேஷ், மாவட்ட துணை பொறுப்பாளர் குமார், மொடக்குறிச்சி ஒன்றிய பொறுப்பாளர் சந்தோஷ் நாடார், பாரதி ஜனதா கட்சியின் கொடுமுடி மேற்கு ஒன்றிய தலைவர் கே. ஆர். செந்தில்குமார், முன்னாள் தலைவர் முருகானந்தம், ஒன்றிய பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், கவுன்சிலர் கார்த்தி, மாவட்ட ஓ.பி.சி அணி தலைவர் ஏ.ஜே. வெங்கடாசலம், மாவட்ட ஐ.டி பிரிவு துணைத் தலைவர் சுரேஷ்குமார், ஒன்றிய துணைத் தலைவர் கலைவாணி, விவசாய அணி தலைவர் ரமேஷ் பொன்வேல், இளைஞர் அணி ஒன்றிய தலைவர் மயிலேந்திரன், சிவகிரி பேரூராட்சி தலைவர் கொரடா சங்கர், நெசவாளர் அணி பிரிவு நாச்சிமுத்து, குமரேசன் ஆசிரியர், ஒன்றிய செயலாளர் பைக் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags