கோபிசெட்டிபாளையம். திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
July 26, 2022
0
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கழக (இடைக்கால) பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர் கட்சி தலைவர், முன்னாள் தமிழ்நாடு முதலைமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார் கே பழனிச்சாமி அவர்களின் மேலான ஆணைக்கினங்க சொத்து வரி, மின் கட்டண உயர்வு ஆகியவை குறித்து திமுக அரசை கண்டித்து 25.07.2022 ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஈரோடு மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர் கே. ஏ. செங்கோட்டையன் அவர்களின் தலைமையில் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, லக்கம்பட்டி பேரூர் கழக தலைவர் அன்னக்கொடி ரவிச்சந்திரன், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி, முன்னாள் நகர்மன்ற தலைவர் கே கே கந்தவேல் முருகன், கோபி நகர செயலாளர் பிரீனியோ M K கணேஷ், அருள் இராமச்சந்திரா, மெளதீஸ்வரன், கோபி நகர மாணவரணி செயலாளர் சோன்பப்டி K செல்வராஜ், கோபி நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் A N முத்துரமணன், 11வது வார்டு கழக செயலாளர் கோ மு சக்திகுமார் மற்றும் ஒன்றிய நகர பேரூர் கழக சார்பு அணி செயலாளர்கள் நிர்வாகிகள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து கே. ஏ. செங்கோட்டையன் அவர்கள் கூறுகையில் - ஈரோடு மாவட்டம் அ.தி.மு.க. வின் கோட்டை, இதைு யாராலும் தடுத்துவிட முடியாது. நாம் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் அது மக்கள் உங்களுடைய ஆதரவினால் தான் என்றும் அடுத்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் நாம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்போம் என்றும் தெரிவித்தார்.