கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட உத்தண்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு துவக்க பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் அமைக்க பூமி பூஜை...
July 18, 2022
0
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி, மொடக்குறிச்சி வட்டம், கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட உத்தண்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடம் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 18.70 லட்சம் மதிப்பீட்டில் அமைய உள்ள புதிய வகுப்பறை கட்டிடத்திற்கு 14.07.2022 வியாழக்கிழமை நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் தலைமையில் பூமி பூஜையானது நடைபெற்றது.
நடைபெற்ற நிகழ்வில் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் வி.சி. வேதானந்தம், மாவட்ட செயலாளர் பரமசிவம், ஒன்றிய தலைவர் டெக்கான் பிரகாஷ், மண்டல் பொதுச் செயலாளர் எஸ். எம். ஆர். ரமேஷ், ஒன்றிய துணைத் தலைவர் லட்சுமணன், தொழிற்பிரிவு மாவட்ட செயலாளர் சிவக்குமார், ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் எம். வி. சண்முகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்மேகம், தொழில் பிரிவு மண்டல் தலைவர் ராஜ்குமார், கிளைத் தலைவர் வெங்கடாச்சலம், உத்தண்டிபாளையம் பரமசிவம், ராஜேந்திரன், மகேஷ்,
அஇஅதிமுக ஒன்றிய செயலாளர் ஆர். பி. கதிர்வேல், ஒன்றிய துணைச் செயலாளர் எம். சின்னசாமி, இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் பி. வீரமணி, பழனிச்சாமி, மாணிக்க சுந்தரம், முருகேசன், சண்முகசுந்தரம்,
மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கணபதி, ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவதி வீரமணி, துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய குழு உறுப்பினர் ஜோதிமணி சரவணன், வார்டு உறுப்பினர் சத்யா பச்சியண்ணன், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற செயலாளர், அரசு அதிகாரிகள் மற்றும் ஊராட்சியின் தூய்மை காவலர்கள், பெருந்திரளான பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்