இப்போட்டிக்கு தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கத்தின் துணைத் தலைவர் கதிர்வேல் முன்னிலை வகித்தார். ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார் தலைமை தாங்கி போட்டியை துவக்கி வைத்தார். மேலும் நிகழ்ச்சியினை தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்க பொதுச்செயலாளர் லோகநாதன் சிறப்பான ஏற்பாடு செய்திருந்தார். இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 140 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கத்தின் 5-வது மாநில அளவிலான மல்யுத்த சாம்பியன்ஷிப் 2022- 2023
August 17, 2022
0
தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கத்தின் 5-வது மாநில அளவிலான மல்யுத்த சாம்பியன்ஷிப் 2022- 2023 ஆம் ஆண்டிற்கான போட்டி வ.உ.சி மைதானத்தில் தொடங்கியது. க்ரிகேரோமன் ஸ்டைல் பிரிவில் 10 எடை பிரிவுகளும், மகளிர் மல்யுத்தப் பிரிவில் 5 எடை பிரிவுகளும் நடைபெறுகின்றன.