அந்தியூரில் மூப்பனாரின் 91வது பிறந்தநாள் விழா
August 19, 2022
0
ஈரோடு மாவட்டம், அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் மூப்பனார் அவர்களது 91 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஈரோடு வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ணசாமி முன்னிலையில் நடைபெற்ற விழாவில், ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் சேமலை அனைவரையும் வரவேற்றார். இதில் மாநில துணைத்தலைவர் ஈரோடு ஆறுமுகம் அவர்களும் பங்கேற்றார். சிறப்பு அழைப்பாளரான மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் ஈரோடு சந்திரசேகர் அவர்கள் கலந்துகொண்டு மூப்பனார் சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள 50 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர மாவட்ட தலைவர் விஜயகுமார், மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் முத்துசாமி, பொன்னுசாமி, மாதேஸ் வாசன், சின்னத்தம்பி பாளையம் ராமச்சந்திரன், சரவணன், முருகேசன், அன்பழகன் ஆகியோருடன் இணைந்து பல கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.