ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் நிறுவனரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவனின் 60வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
அந்தியூர் ஒன்றிய செயலாளர் சிறுத்தை தங்கராசு தலைமையில், பத்ரகாளி அம்மன் கோவில் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் கட்சி கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து கலந்து கொண்ட கட்சியினர் வீரவணக்கம் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அந்தியூர் தொகுதி செயலாளர் வெற்றிச்செல்வன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கிருஷ்ணன், மாநில வணிகர் அணி துணை செயலாளர் ஈஸ்வரன், மாவட்ட ஊடக மைய செயலாளர் சுரேஷ், வணிகர் அணி மாரசாமி செந்தில்குமார், தாவித் ராஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.